பாண்டியர் கால போர்வீரரின் நடுகல் கண்டுபிடிப்பு
எருமப்பட்டி அருகே பாண்டியர் கால போர்வீரரின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர் பாபு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, பவித்திரம், வரகூர் பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இவர் வரகூர் கிராமத்தில் ஏரியின் அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, அங்குள்ள மக்கள் கல்வெட்டு ஒன்றை பரிவார தெய்வமாக வழிபடுவதை கண்டுபிடித்தார். இந்த நடுகல் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த போர்வீரர் ஒருவருக்கு நடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் பாபு கூறியதாவது:- தற்போது கண்டறியப்பட்டு உள்ள நடுகல் பெரும்படை கோவிலாக கட்டப்பட்டுள்ளது. போரில் வீரமரணம் அடைந்த அல்லது மக்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களுக்கு நடுகல் வைப்பது தமிழர்களின் மரபாகும். தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், புறநானூறு போன்றவை நடுகல் வழிபாடு பற்றிய செய்திகளை தருகின்றன.
இவ்வகையான பெரும்படை கோவில்கள் தமிழகத்தில் அரிதாகவே கண்டறியப்பட்டு உள்ளன. முற்காலத்தில் இப்பகுதி வனமாக இருந்துள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் வளர்த்துவந்த கால்நடைகள் மற்றும் பொதுமக்களை அங்கு சுற்றித்திரிந்த புலி ஒன்று அச்சுறுத்தி வந்துள்ளது. பொதுமக்களையும், கால்நடைகளையும் காக்க புலியோடு சண்டையிட்டு வீரமரணம் அடைந்த ஒரு போர்வீரருக்கு இந்த நடுகல் நடப்பட்டு உள்ளது.
பிற்காலத்தில் இந்த நடுகல்லிற்கு கற்கோவில் அமைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் மேல்தளத்தில் விமானம் அமைந்திருந்த அடையாளங்கள் காணப்படுகின்றன. கோவிலின் உட்புறத்தில் பாண்டிய மன்னன், அவனது அரசின் புடைப்பு சிற்பம் மற்றும் சைவ, வைணவ சமய சிற்பங்களும், போர்வீரர்கள் போர்புரிவது போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் இக்கோவில் பாண்டிய மன்னரின் காலத்தியது என்பதை மெய்பிக்கும் வகையில் அடையாளமாக மீன்உருவங்கள் புடைப்பு சிற்பமாக கோவிலின் மேல் விதானத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் இந்த கோவிலுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகல் வீரனின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அங்கு காணப்படவில்லை. இருப்பினும் அப்பகுதி மக்கள் இந்த நடுகல்லினை வேல்காரன் என்று அழைத்து வருகின்றனர். தமிழரின் வீர மரபினை பறைசாற்றும் இவ்வகையான வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story