மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகை 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகை 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார். 2 நாட்கள் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்களது கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி புதுக்கோட்டை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

இதில் கலந்து கொள்வதற்காக இன்று மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் பசுமலைப்பட்டிக்கு செல்கிறார். தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்து விட்டு புதுக்கோட்டை அருகே உள்ள ஜே.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரவு தங்குகிறார்.

இதைத்தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை சுமார் 8 மணியளவில் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் புதிதாக தொடங்கப்பட உள்ள புதுகை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்தை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற உள்ள சட்டமன்ற இணை செயலாளர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர் கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். 2 நாள் சுற்று பயணமாக புதுக்கோட்டைக்கு வர உள்ள தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் வழியில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

பிற கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story