விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மாட்டு வண்டி பந்தயம்விளாத்திகுளம் அருகே புளியங்குளத்தில் முத்துராமலிங்க தேவர் 110–வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பசும்பொன் இளைஞர் நற்பணி மன்றம், வீரமங்கை வேலுநாச்சியார் மகளிர் அணி சார்பில் மாட்டு வண்டி பந்தயம் கடந்த 2 நாட்கள் நடந்தது. புளியங்குளத்தில் இருந்து புறப்பட்டு விளாத்திகுளம் வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி, பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமை தாங்கி, கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள்நேற்று முன்தினம் மாலையில் நடந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் கம்பத்துபட்டி விஜயபாண்டி மாட்டு வண்டி முதலிடமும், சிங்கிலிபட்டி பெருமாள்சாமி மாட்டு வண்டி 2–வது இடமும், சக்கம்மாள்புரம் கமலா மாட்டு வண்டி 3–வது இடமும் பிடித்தது.
நேற்று காலையில் நடந்த பெரிய மாட்டு வண்டி போட்டியில் ஓட்டப்பிடாரம் சண்முகாபுரம் விஜயகுமார் மெடிக்கல் மாட்டு வண்டி முதலிடமும், சங்கரப்பேரி ஆறுமுகபாண்டி 2–வது இடமும், ஈராச்சி சிவஹரிஷ் மாட்டு வண்டி 3–வது இடமும் பிடித்தது.
சின்ன மாட்டு வண்டி போட்டியில் குமரெட்டையாபுரம் பத்மேஷ் மாட்டு வண்டி முதலிடமும், அய்யாரெட்டி ஊருணி சென்னம்மாள் மாட்டு வண்டி 2–வது இடமும், மேல செல்வனூர் சத்தியமூர்த்தி மாட்டு வண்டி 3–வது இடமும் பிடித்தது.
பரிசளிப்புவெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,001, 2–வது பரிசாக ரூ.4,001, 3–வது பரிசாக ரூ.3,001 வழங்கப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.12,001, 2–வது பரிசாக ரூ.10,001, 3–வது பரிசாக ரூ.8,001 வழங்கப்பட்டது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,001, 2–வது பரிசாக ரூ.8,001, 3–வது பரிசாக ரூ.6,001 வழங்கப்பட்டது.