டெங்கு காய்ச்சலை தடுக்க நெல்லையில் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் வலியுறுத்தினர்.
நெல்லை,
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் மீரான் முகைதீன், செயலாளர் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் நெல்லை மாநகராட்சிக்கு வந்து, அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கால்வாய் பாலம் தடுப்பு சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இந்த கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கும் இந்த பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகள் நலன் கருதி இடம் ஒதுக்கி பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
பேட்டை ரோடுநெல்லை–பேட்டை காயிதே மில்லத் ரோடு, சேரன்மாதேவி ரோடு தொடர் மழையால் தண்ணீர் தேங்கி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலப்பாளையத்தில் ஆடு அறுப்பு மனையில் உள்ள கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதை தடுத்த வேண்டும்.
மேலப்பாளையத்தில் பொது இடங்களில் மீன் விற்பனை செய்வதை தடுத்து, மீன் மார்க்கெட்டில் மட்டுமே மீன் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர்இதேபோல் தே.மு.தி.க. 26–வது வார்டு செயலாளர் செல்வம் தலைமையில் பெருமாள்புரம் பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘‘26–வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி 13 வீடுகளுக்குள் புகுந்து விட்டன. சாக்கடை, மழைநீர் வடிகால் பாதை மணல், கற்களால் நிரம்பி இருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே மழை நீர் வடிகால் தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர பெருமாள்புரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி–2 மக்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் 1,100 வீடுகளும், 5 ஆயிரம் மக்களும் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். சுத்தமான குடிநீர், தெருக்களில் தார் ரோடு, பாதாள சாக்கடை முறையாக பராமரிக்க வேண்டும். அனைத்து பூங்காக்களையும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர்.