சுரங்கப்பாதை அமைப்பதை எதிர்த்து மறியல் பணிகள் மீண்டும் நிறுத்தம்
விருதுநகர்–பேராலி ரோட்டில் ரெயில்வேகேட் உள்ளது. இந்த பகுதியில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் – பேராலி ரோட்டில் ரெயில்வேகேட் உள்ளது. இந்த பகுதியில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அப்போது அந்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டது. பின்னர் அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.