குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் மகனை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
உடுமலை அருகே குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் மகனை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தளி,
உடுமலை அருகே சடையபாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 60). இவருடைய மனைவி சிவபாக்கியம்(55). இவர்களுக்கு மகாலிங்கம் (38), சசிக்குமார் (36) என்ற மகன்களும் கவிதா(34) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ராமேகவுண்டன் புதூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தோட்டத்தில் செல்லமுத்து கூலிவேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சசிக்குமார் தினமும் தனது பெற்றோரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சசிக்குமார் குடித்துவிட்டு வந்து, மீண்டும் குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சிவபாக்கியம் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் தனது தாயாரை அடித்து உதைத்துள்ளார். இதை அருகில் இருந்த செல்லமுத்து கவனித்து விட்டார். உடனே அவர், சசிக்குமாரை கண்டித்துள்ளார். அப்போது தந்தை- மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செல்லமுத்து அருகே கிடந்த மண்வெட்டியை எடுத்து தனது மகன் சசிக்குமாரின் தலை மற்றும் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சசிக் குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சசிக்குமாரின் அண்ணன் மகாலிங்கம் அமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் சசிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லமுத்துவை கைது செய்தனர்.
குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தையே வெட்டிக்கொன்ற சம்பவம் அமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story