அரபிக்கடலில் 210 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி


அரபிக்கடலில் 210 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி
x
தினத்தந்தி 2 Nov 2017 2:52 AM IST (Updated: 2 Nov 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் 210 அடி உயரத்தில் அமைய உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு, மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

மும்பை,

மும்பை அரபிக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மும்பை கவர்னர் மாளிகையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் இந்த சிலை அமைகிறது.

அங்கு ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதன் மீது குதிரையில் அமர்ந்தவாறு சத்ரபதி சிவாஜி கம்பீரமாக செல்வதை போல் சிலை நிறுவப்படுகிறது.

ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அமையும் இந்த சிலை, பீடத்துடன் சேர்த்து 192 மீட்டர் உயரம் கொண்டதாக நிறுவ மராட்டிய அரசு முடிவு செய்திருந்தது. இந்தநிலையில், தற்போது சிலை உயரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது சத்ரபதி சிவாஜி சிலையை 210 அடி உயரம் கொண்டதாக நிறுவ முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், 210 அடி உயரத்தில் கடலுக்குள் சிலை அமைப்பதற்கு மாநில கடலோர மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் அனுமதி அளித்தது.

சத்ரபதி சிவாஜி சிலை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, வருகிற ஜனவரி மாதம் பணிகளை தொடங்கி 2021–ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story