பல்வேறு சவால்களை சந்தித்து கர்நாடகம் வளர்ச்சி அடைந்துள்ளது மந்திரி ஜெயச்சந்திரா பேச்சு


பல்வேறு சவால்களை சந்தித்து கர்நாடகம் வளர்ச்சி அடைந்துள்ளது மந்திரி ஜெயச்சந்திரா பேச்சு
x
தினத்தந்தி 2 Nov 2017 3:30 AM IST (Updated: 2 Nov 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு சவால்களை சந்தித்து கர்நாடகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

பெங்களூரு,

துமகூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை மந்திரியும், அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜெயச்சந்திரா கலந்துகொண்டு கன்னட கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:–

ஒருங்கிணைந்த கர்நாடக மாநிலம் உருவாகி 61 ஆண்டுகள் முடிவடைந்து இன்று (அதாவது நேற்று) 62–வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இந்த விழாவை நாம் கோலாகலமாக கொண்டாடுகிறோம். இது பெருமையான வி‌ஷயம். பல்வேறு சவால்களை சந்தித்து நமது கர்நாடகம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ச்சியில் நாம் முன்னணியில் உள்ளோம்.

கலை, இலக்கியம், விளையாட்டு, கல்வி, அறிவியல் உள்பட எல்லா துறையிலும் நமது துமகூரு மாவட்டம் வளர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எங்கள் அரசு உதவியது. இதற்காக கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடனை சித்தராமையா தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட்டார். தோட்டக்கலை, தொழில்துறை வளர்ச்சி மற்றும் சட்டம்–ஒழுங்கு நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவத்தை அரசு கொடுத்துள்ளது.

இவ்வாறு ஜெயச்சந்திரா பேசினார்.


Next Story