அரசு ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
திருமருகல் அருகே அரசு ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை- வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த ஆதினக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை அளிக்க வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
பின்னர் இரவு 10 மணியளவில் திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவை பார்த்தபோது, அதுவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் உள்ளிட்டவைகள் திருட்டு போயிருந்தது. உடனே இதுகுறித்து சிங்காரவேலு, திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சிங்காரவேலு தன் குடும்பத்தினருடன் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள்-வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்மநாராயணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் அங்கு வந்து திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story