பள்ளியின் முன்பு மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு
போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டில் நிதிஉதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 120 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
போளூர்,
போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டில் நிதிஉதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 120 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு எதிரில் ஊரக விளையாட்டு திடலும், தானிய அறுவடை களமும் உள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளியின் முன்பு மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் அங்கே அமைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாயில் ஏற்படும் நீர் கசிவினால் தொடர்ந்து தண்ணீர் வீணாகி பள்ளியின் முன்புறம் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி மாணவர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் பல்வேறு காய்ச்சல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
பள்ளி முன்புறம் மழைநீர் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, பள்ளியின் முன்புறம் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.