கல்குவாரி ஏலத்தை தடை செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
பாடாலூர் அருகே கல்குவாரி ஏலத்தை தடை செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே தெரணி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் அருகே மலை ஒன்று உள்ளது. அந்த மலையில் அரசு கல் குவாரிகள் அமைத்து அதனை தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, குவாரிகள் தனியார் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்தது. அந்த கல்குவாரியை ஏலம் எடுத்த தனியார் ஒப்பந்ததாரர்கள் மலையில் துளை போட்டு, வெடி பொருள்களையும், வெடி மருந்துகளையும் வைத்து வெடிக்க செய்து அந்த கல்லை எடுத்து விற்பனை செய்து வந்தனர். மேலும் வெடிக்காத வெடி பொருள்களை வெடிக்க செய்யாமல் மலையிலேயே விட்டு செல்கின்றனர்.
இதனால் நீர் நிலைகள் மாசடைந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை பாதுகாக்க மலையின் அருகேயும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே குவாரியை அரசு ஏலம் விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஏலத்தை தடை செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறு வதாக இருந்ததை அறிந்த தெரணி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து தெரணி பஸ் நிறுத்தம் அருகே அரியலூர்-ஆலத்தூர் கேட் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குமாரவேல், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் ஏலத்தை நிறுத்துவதாகவும், குவாரியை தடை செய்வதாகவும் கிராம மக்களிடம் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஆலத்தூர் கேட் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story