அறந்தாங்கி அருகே 3 அடி உயர வாலிபருடன் பட்டதாரி பெண் காதல் திருமணம்


அறந்தாங்கி அருகே 3 அடி உயர வாலிபருடன் பட்டதாரி பெண் காதல் திருமணம்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே 3 அடி உயர வாலிபரை பட்டதாரி பெண் காதல் திருமணம் செய்து கொண்டார்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நெய்வத்தளியை சேர்ந்தவர் சோமன் மகன் பாபு(வயது 28). 3 அடி உயரம் உள்ள இவர், எம்.ஏ., பி.எட் வரை படித்து, தற்போது ஆவணம்-கைகாட்டியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரும், குளமங்கலத்தை சேர்ந்த சண்முகம் மகள் பிரியாவும்(26) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

4¾ அடி உயரம் உள்ள பிரியா எம்.எஸ்சி., பி.எட் படித்து உள்ளார். படிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தொடர்ந்து பழகி வந்தனர். இவர்களின் காதல் வீட்டுக்கு தெரியும்போது, பெண்ணின் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை பிரியா சமாதானம் செய்துள்ளார். இருப்பினும் அவர்கள் நீ வேண்டுமானால் திருமணம் செய்து கொள், நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம் என கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று நெய்வத்தளி முத்துமாரியம்மன் கோவிலில் பாபுவிற்கும், பிரியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கீரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

காதலுக்கு முன்பு உயரம் தடையில்லை என காதலுக்கு மரியாதை செய்து, உயரம் குறைவான காதலனை கரம்பிடித்த பிரியா தான் ஒரு முன்மாதிரி பெண் என்பதை நிரூபித்துவிட்டார். 

Related Tags :
Next Story