100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணியில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் பொதுமக்கள் பலமுறை தங்களுக்கு வேலை வழங்க கோரி மனு கொடுத்தும் இதுவரை வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி நேற்று ஆத்தூர்-திருச்சி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story