தர்மபுரியில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு சிறப்பு பயிற்சி


தர்மபுரியில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 3 Nov 2017 4:15 AM IST (Updated: 3 Nov 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழக போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 250 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் பணி தர்மபுரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தொடங்கியது.

தர்மபுரி,

தமிழகத்தில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 250 பேருக்கு போலீஸ் பயிற்சி அளிக்கும் பணி தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தொடங்கியது. இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) மகேஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் துறை சார்ந்த பயிற்சிகளை பெற வேண்டும். போலீசாருக்கு உரிய ஒழுக்க நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த பயிற்சியில் பல்வேறு விதமான வழக்குகளை விசாரிக்க வேண்டிய முறைகள் குறித்து விளக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கு

வழக்குகள் தொடர்பான சட்டப்பிரிவுகள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாகவும் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் வழங்கப்படும் பல்வேறு பணிகளை நல்லமுறையில் மேற்கொண்டு பயிற்சியை சிறப்பான முறையில் முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த போலீசாராக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் காவலர் பயிற்சி பள்ளியின் துணைமுதல்வர் சுப்பையா, சட்டப்பயிற்சியாளர் அறிவழகன், கவாத்து பயிற்சியாளர் தென்னரசு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாரூக் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பள்ளியில் பயிற்சி போலீசாருக்கு 7 மாதம் உடற்கூறு பயிற்சியும், ஒரு மாத சட்டம்-ஒழுங்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

Related Tags :
Next Story