பள்ளிகளை பார்வையிட வந்த கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
சின்னாளபட்டியில் உள்ள பள்ளிகளை பார்வையிடுவதற்காக வந்த கலெக்டர் டி.ஜி.வினயை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டியில் கடந்த 3 மாதத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 5 பேர் இறந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் உள்பட 40 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சின்னாளபட்டியில் செயல்படும் பள்ளிகள் சுகாதாரமாக உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று சின்னாளபட்டிக்கு வந்தார். அவருடன் மருத்துவ நலப்பணிகள் உதவி இயக்குனர் குணசேகரன் மற்றும் அதிகாரிகளும் வந்தனர்.
பின்னர் சின்னாளபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதையடுத்து மாணவர்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார். அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் கலெக்டரை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் சின்னாளபட்டி அரசு மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. எனவே அதனையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்களுடன் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் புறப்பட்டு சென்றார். கலெக்டர் வருவதை பார்த்ததும் மருத்துவமனை அருகே வசிக்கும் மக்களும் அங்கு திரண்டனர். அவர்கள், 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய மருத்துவமனை, பகுதி நேரம் மட்டுமே செயல்படுகிறது. இங்குள்ள டாக்டர்களில் சிலர் தனியாக மருத்துவமனை நடத்துகின்றனர். அதனால் அரசு மருத்துவமனையில் அதிக நேரம் இருப்பதில்லை.
இதனால் எங்கள் பகுதி மக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதியடைகின்றனர். மருத்துவமனையில் மின்விளக்கு, தண்ணீர் வசதி இல்லை. இதனால் உள்நோயாளிகளாக யாரும் இருப்பதில்லை. இதன் காரணமாக உள்நோயாளிகள் பிரிவு பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. மருத்துவமனையில் சுகாதாரம் என்பது பெயரளவிலேயே உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர், பின்னர் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை சுகாதாரமின்றி இருப்பதும், உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்டவை பூட்டி கிடப்பதும் கலெக்டருக்கு தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்களிடம் இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தினார். அதையடுத்து பொதுமக்களிடம் பேசிய கலெக்டர், உங்கள் கோரிக்கையின்படி மருத்துவமனை சுகாதாரமாக செயல்படவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிவரும் காலங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் பணியில் இல்லாவிட்டால், எனது செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மருத்துவமனை வளாகத்தில் எனது செல்போன் எண் குறித்த விவரங்கள் ஒட்டப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story