பழனி சப்–கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா போராட்டம்


பழனி சப்–கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:30 AM IST (Updated: 4 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

பழனி அடுத்த பாலசமுத்திரம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.

பழனி,

பழனி அடுத்த பாலசமுத்திரம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர் பாலசமுத்திரத்தில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஹக்கீம்ராஜா என்பவருக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே பொதுப்பாதை தகராறு இருந்து வருகிறது. இதுகுறித்து இருவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பொதுப்பாதையை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோர்ட்டு தெரிவித்தது. ஆனால் ஹக்கீம்ராஜா பொதுப்பாதையில் ஆறுமுகத்தை செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆறுமுகம், பழனி சப்–கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனு தொடர்பாக தாசில்தார் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பகுதியை பொதுப்பாதையாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் ஹக்கீம்ராஜா பொதுப்பாதையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினருடன் பழனி சப்–கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுப்பாதை பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story