பாளையங்கோட்டை பகுதியில் புதிய கட்டிடங்கள்–தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்துக்கு அபராதம்


பாளையங்கோட்டை பகுதியில் புதிய கட்டிடங்கள்–தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்துக்கு அபராதம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 4 Nov 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை பகுதியில், கொசுப்புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், புதிய கட்டிடங்கள், தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றுக்கு நெல்லை மாநகராட்சியினர் அபராதம் விதித்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை மகாராஜநகர் மற்றும் உழவர் சந்தை பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா தூய்மை பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேற்று காலையில் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மகாராஜநகர் 23–வது குறுக்குதெரு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தபோது, அங்குள்ள தனியார் உணவு தயாரிக்கும் நிறுவன வளாகத்தில் டெங்கு கொசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த பகுதியில், பாட்டில்களை சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் வகையில் போட்டு வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து உழவர் சந்தை அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகம் உள்ள மைதானத்தில் துப்புரவு பணிகளை பார்வையிட்ட, அவர் அங்கு நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களையும், பழைய வாகனங்களையும், குப்பைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், உதவி ஆணையாளர் வசந்தராஜன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, தாசில்தார் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், டெங்கு கொசு புழு கண்டறியப்பட்ட புதிதாக கட்டப்பட்டு வரும் 3 கட்டிடங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை மகராஜ்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவு தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, என பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் தெரிவித்தார்.


Next Story