மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளின் பெற்றோருக்கு வைகோ ஆறுதல்
சென்னை கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளின் பெற்றோருக்கு வைகோ ஆறுதல்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பார்த்திபனின் மகள் பாவனா (வயது 7), மூர்த்தியின் மகள் யுவஸ்ரீ (9) இருவரும் தெருவில் நடந்து சென்றபோது அங்கு தேங்கி நின்ற மழைநீரில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்தநிலையில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பலியான 2 சிறுமிகளின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறும்போது, “மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழப்புக்கு தமிழக அரசுதான் காரணம். இந்த இடத்தை சுற்றி பார்த்ததில் இங்கு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. அதை உடனடியாக மின்சார துறை சரிசெய்யவேண்டும். 2 மாதத்துக்கு முன்பே வானிலை மையம் இந்த ஆண்டு அதிகப்படியான மழை இருக்கும் என எச்சரித்து இருந்தது. 2015-ம் ஆண்டு மழை, வார்தா புயலால் தமிழக அரசு பாடம் கற்கவில்லை” என்றார்.

Related Tags :
Next Story