ஆலங்குடி, பொன்னமராவதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம் அதிகாரிகள் ஆய்வு


ஆலங்குடி, பொன்னமராவதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி, பொன்னமராவதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆலங்குடி,

ஆலங்குடி கே.வி.எஸ்.தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் சிவகுமார் (வயது 27). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, வட்டார மருத்துவர் அருள், ஆலங்குடி தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதா?, உற்பத்திக்கான சூழல் உள்ளதா? என்று அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர். மேலும் பேரூராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் கொசு மருந்து அடித்து டெங்கு தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பொன்னமராவதி

இதேபோல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.அதன்படி அப்பகுதியில் உள்ள பட்டமரத்தான் தெருவில், பேரூராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் புகை மருந்து அடித்தனர். இதனை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி ஆய்வு செய்தார். அப்போது பொன்னமராவதி வட்டாட்சியர் சங்கர்,பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story