வெங்கடேஸ்வர சாமி கோவில் புதிய தேர் அமைக்கும் பணி அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் ஆய்வு


வெங்கடேஸ்வர சாமி கோவில் புதிய தேர் அமைக்கும் பணி அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் புதிய தேர் அமைக்கும் பணியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தட்சிண திருப்பதி என்று போற்றப்படும் இந்த கோவிலுக்கு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் வெங்கடேஸ்வர சாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் சேவா டிரஸ்ட் சார்பில் 51 அடி உயரத்தில் புதிதாக தேர் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தேரை நல்ல முறையில் அமைக்க வேண்டும். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், கோவில் அறங்காவலர் நாராயணசாமி, முனிராஜி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கோவில் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் கூறுகையில், சேலம் மண்டலத்திலேயே மிகப்பெரிய தேராக இது அமைக்கப்படுகிறது. இந்த தேர் வெள்ளோட்டம் வருகிற தை மாதம் நடைபெறும் என்று தெரிவித்தனர். 

Related Tags :
Next Story