நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து மர்ம நோய்களை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், சுகாதாரத்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துவது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணி சுவாமி, தங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பார்வையாளர் எஸ்.பி.தேவ் வரவேற்று பேசினார். கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், இணை அமைப்புச் செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்.ரெத்தினமணி, மாநில பிரசார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.மணி, வக்கீல் சிவகுமார், மாவட்ட பொருளாளர் தர்மலிங்க உடையார், மாவட்ட பார்வையாளர்கள் கிருஷ்ணன், வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் அஜித் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story