டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய பலத்த மழை குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது
டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
தஞ்சாவூர்,
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த 6 நாட்களாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை முதலே தொடர்ந்து அடை மழைபெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவதால் இளம்நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், சூரக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன.
நாகை மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய மழை நேற்று 6-வது நாளாக தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் நாகை மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பலத்த மழையால் குளங்கள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடுவையாற்று கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். நாகை அருகே திட்டச் சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி பிள்ளையார் கோவில் குளம் அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் முறிந்து விழுந்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரை உடைந்தது. இதனால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செபஸ்தியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார், ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று குளத்தின் கரையை மண் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர். வாழ்குடியில் உள்ள மீனவைப்பூர் தலைப்பு வாய்க்கால் பாலம் பழுதடைந்தது. இதனை நாகை தாசில்தார் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்.
வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரையில் உள்ள போக்குவாய்க்காலின் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30-ந் தேதி முதல் மழை தொடங்கி கடந்த 6 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால மாணவர்கள் நலன் கருதி கடந்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இடைவெளிவிடாமல் பெய்து வருகிறது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருவாரூர்-55, நன்னிலம்-50, குடவாசல்-37, வலங்கைமான்-35, பாண்டவையாறு தலைப்பு-39, மன்னார்குடி-38, நீடாமங்கலம்-38, திருத்துறைப்பூண்டி-127, முத்துப்பேட்டை-46.

Related Tags :
Next Story