ஜலகண்டாபுரம் அருகே சாலை விபத்தில் பிளஸ்-1 மாணவி பலி
ஜலகண்டாபுரம் அருகே சாலை விபத்தில் பிளஸ்-1 மாணவி பலி உறவினர்கள் சாலை மறியல்-பரபரப்பு
ஜலகண்டாபுரம்,
ஜலகண்டாபுரம் அருகே சாலை விபத்தில் பிளஸ்-1 மாணவி பலியானார். 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். பலியான மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் பிரேமலதா (வயது 16). இவர் ஜலகண்டாபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை 10 மணியளவில், தனது வகுப்பு தோழியான ஜலகண்டாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த லாவண்யாவை (16) அழைத்துக் கொண்டு தனது மொபட்டில் காட்டம்பட்டியில் உள்ள அவரது மற்றொரு தோழி ஸ்ரீமதியின்(16) வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்து ஸ்ரீமதியை அழைத்துக்கொண்டு ஜலகண்டாபுரம் நோக்கி 3 பேரும் ஒரே மொபட்டில் வந்தனர். அவர்கள் காட்டம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே வரும்போது சாலை ஓரம் நின்று இருந்த லாரியையொட்டி, சாலையில் செல்லும் போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஸ்ரீமதி ஆபத்தான நிலையில் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். மேலும் லாவண்யா, பிரேமலதா ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதே நேரத்தில் மாணவி ஸ்ரீமதி மதியம் 1.30 மணிக்கு இறந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பிற்பகல் 3 மணியளவில் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்திற்கு, விபத்தில் பலியான ஸ்ரீமதியின் உறவினர்கள் வந்தனர்.
இறந்து போன மாணவியின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்த மாணவியின் உறவினர்கள் காலை 10.45 மணிக்கு மாணவி இறந்ததை மதியம் 1.30 மணி என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்கள், எனவே காலை 10.45 மணி என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் காட்டம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் கர்ணன் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில் மாணவி இறந்த நேரத்தை விசாரித்து சரியான நேரம் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் ஜலகண்டாபுரம்-தாரமங்கலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Related Tags :
Next Story