வேலூரில் மழைக்கால பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை
வேலூர் கன்சால்பேட்டையில் மழைக்கால பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.
வேலூர்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரிடரை தடுக்கவும், பேரிடரில் சிக்கியவர்களை மீட்கவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் ராணிப்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையில், 39 போலீசார் பேரிடர் பணிகளை மேற்கொள்கிறார்கள். இவர்கள் தீயணைப்பு துறை, தன்னார்வலர்களுடன் இணைந்து பேரிடரை எதிர் கொள்வார்கள். மழைக்கால பேரிடர் குறித்த மீட்பு பணிக்கு 94441 05859 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று இன்ஸ்பெக்டர் நாராயணன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த குழுவினர் மழைக்கால பேரிடரை எதிர் கொண்டு தற்காத்து கொள்வது மற்றும் மீட்பது குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் கன்சால்பேட்டையில் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் ராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் படக்காட்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள நிக்கல்சன்கால்வாய் தூர்வார வேண்டும். சிறிய மழை பெய்தாலே குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் இடங்கள் கணக்கிடப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 20 பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மாநகராட்சி பகுதியில் ஒரு வார்டுக்கு 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள நபர் ஒருவர் தினமும் 50 வீடுகளுக்கு சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகிறதா? என்று ஆய்வு செய்வார். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார். கன்சால்பேட்டை பகுதி குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வராத வண்ணம் இரு பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், தாசில்தார் பாலாஜி, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல இளநிலை பொறியாளர் செந்தில், இன்ஸ்பெக்டர் அறிவழகன், தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story