தமிழகம் முழுவதும் 29-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வருகிற 29-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக வேலூரில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வன் தெரிவித்தார்.
வேலூர்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்கூட்டம் வேலூர் டவுன் ஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கொய்யாமணி, துணைச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரகு வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் செல்வன், மாநில முதன்மை செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில தலைவர் சந்தன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
பின்னர் மாநில பொதுச் செயலாளர் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள் இணையதள பணிகளை செய்ய அதற்கு தேவையான கருவிகள் மற்றும் இலவச இணையதள வசதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, ஆன்லைன் கருவிகள், இலவச இணையதள வசதி ஆகியவற்றை வழங்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலர்கள் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு, அடுத்த மாதம் 7-ந் தேதியில் இருந்து கூடுதல் பொறுப்பில் நீதிமன்ற பணிகளை தவிர வேறு பணிகளை செய்ய மாட்டோம்.
அதேபோல், டிசம்பர் 14-ந் தேதி முதல் இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்காக பரிந்துரை செய்வதையும் கிராம நிர்வாக அலுவலர்கள் நிறுத்துவார்கள். கிராம நிர்வாக அலுவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு கல்வி தகுதியாக பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story