பெண்ணுக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க..!


பெண்ணுக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க..!
x
தினத்தந்தி 5 Nov 2017 12:29 PM IST (Updated: 5 Nov 2017 12:28 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பொதுவாகவே ஆண்களை விட அதிகம் பேசும் சுபாவம் கொண்டவர்கள். அவர்கள் தங்களோடு ஜாலியாக அதிக நேரம் உரையாடும் ஆண்களை விரும்புவார்கள்.

பெண்கள் பொதுவாகவே ஆண்களை விட அதிகம் பேசும் சுபாவம் கொண்டவர்கள். அவர்கள் தங்களோடு ஜாலியாக அதிக நேரம் உரையாடும் ஆண்களை விரும்புவார்கள். ஆனால் அவர்களோடு எப்படி பேசவேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களுக்கு தெரியாததால், அவர்களது பேச்சு உப்புசப்பற்று போய்விடும்.

* பெண்களோடு பேசும்போது எக்காரணத்தைக் கொண்டும் அதில் ஆணாதிக்கத்தன்மை வெளிப்பட்டு விடக்கூடாது. சிலர் பெண்களை பேச விடாமல் தாங்களே பேசிக்கொண்டிருப்பார்கள். அத்தகைய ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

* இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் கருத்து மோதலாக மாறும்போது ஆண்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அதைத்தான் பெண்கள் எதிர்பார்ப்பார்கள்.

* தான் பேசும் விஷயங்களை ஆண் ஆவலோடு கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் அதிகமிருக்கும். அதை புரிந்து கொள்ளாமல் வேறு எங்கோ சிந்தனையை சிதறவிட்டு, ஒப்புக்காக ‘ஆமாம்’ போடும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

* எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் அது சம்பந்தமான கேள்விகளை இடை, இடையே கேட்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். தான் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை என்றால் அதனை ஆண்கள் வெளிப்படையாக கூறிவிட வேண்டும். ஆனால் காது கொடுத்து கேட்பதுபோல் பாவனை செய்துகொண்டிருப்பது பெண்களுக்கு பிடிக் காது.

* பெண் மனக்கஷ்டத்தில் இருக்கும்போது கேலி கிண்டல் செய்வது, நகைச் சுவையாக பேசி சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மனம் வருந்த செய்வது கூடாது. அப்படிப்பட்ட சுபாவம் கொண்ட ஆண்களிடம் பேசவே பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

* பொதுவாகவே பெண்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை பிடித்த ஆண்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அன்றைய பொழுதில் தனது மனதை வருந்த செய்த, குஷிப்படுத்திய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதற்கு போதுமான நேரத்தை பெண்களுக்கு, ஆண்கள் ஒதுக்கித்தர வேண்டும்.

* சில விஷயங்கள் ஆண்களின் பார்வையில் சாதாரண மாக இருக்கலாம். ஆனால் அது பெண்ணுக்கு ஆனந்தம் தருவதாக அமையலாம். அதுபற்றி பேசும்போது, ‘இதை ஒரு பெரிய விஷயமாக பேசிக்கொண்டிருக்கிறாய்?’ என்று அவர்கள் மனம் நோகும்படி கூறிவிடக்கூடாது.

* ஆண்களை விட பெண்களிடத்தில் நகைச்சுவை உணர்வு அதிகமிருக்கும் என்பதை புரிந்து கொண்டு அவர்களின் ரசனையான பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும்.

* பெண்கள் என்றாலே பொறுமை காக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். இப்படிதான் உடை உடுத்த வேண்டும், அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் ஆண்களை அறவே பெண்களுக்கு பிடிக்காது.

* ஆண் தான் எத்தகைய தவறு செய்தாலும் அனைத்தையும் தாங்கி கொண்டு பெண் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் தன்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாத ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

* பெண் மீது அதிக அக்கறை கொள்வதாக நினைத்து அவரது அந்தரங்க விஷயங்களுக்குள் மூக்கை நுழைக்கக்கூடாது. அத்தகைய ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

* தங்களுடைய தோழிகள் வட்டத்தை பற்றி விசாரிக்க ஆசைப்படும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. தோழிகளுடன் ஒப்பிட்டு தன்னை பேசுவதையும் பெண்கள் விரும்ப மாட்டார்கள். 

Next Story