போலி டாக்டர் என்ற பெயரில் ஓமியோபதி டாக்டர்களை கைது செய்வதா? ஆயுஷ் மருத்துவர் சங்க தலைவர் கண்டனம்


போலி டாக்டர் என்ற பெயரில் ஓமியோபதி டாக்டர்களை கைது செய்வதா? ஆயுஷ் மருத்துவர் சங்க தலைவர் கண்டனம்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:00 AM IST (Updated: 6 Nov 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

போலி டாக்டர் என்ற பெயரில் ஓமியோபதி டாக்டர்களை கைது செய்யக்கூடாது என்று ஆயுஷ் மருத்துவர்கள் சங்க மாநில் தலைவர் செந்தமிழ்செல்வன் கண்டனம் தெரிவித்தார்.

மானாமதுரை,

சித்தா, யுனானி, ஆயுர்வேதா, யோகா, ஓமியோபதி மருத்துவர்களின் கூட்டமைப்பு(ஆயுஷ்) சங்க மாநில தலைவர் செந்தமிழ்செல்வன் நேற்று மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூருக்கு வந்தார். அவர் போலி டாக்டர் என கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஓமியோபதி டாக்டர் பாண்டீஸ்வரியின் வீட்டிற்கு நிர்வாகிகளுடன் சென்று, கைது மற்றும் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:– தமிழகத்தில் 18 ஆயிரம் சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி டாக்டர்கள் உள்ளனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை. ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு. டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தப்படி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 20–க்கும் மேற்பட்ட ஓமியோபதி டாக்டர்கள் போலி டாக்டர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இது முழுக்க, முழுக்க சட்டவிரோத செயலாகும். முறையாக மருத்துவம் படித்து சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது தவறானது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை ஓமியோபதி டாக்டர்கள் 3 பேர் போலி டாக்டர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே போலி டாக்டர் என்ற பெயரில் ஓமியோபதி டாக்டர்களை கைது செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story