அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்த விவகாரம்: போக்குவரத்துத்துறை மந்திரியிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவு


அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்த விவகாரம்: போக்குவரத்துத்துறை மந்திரியிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2017 3:00 AM IST (Updated: 6 Nov 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்து துறை மந்திரி தாமஸ்சாண்டியிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போலீசாருக்கு கோட்டயம் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோட்டயம்,

ஆலப்புழை மாவட்ட ஜனதாதள (எஸ்) கட்சியின் செயலாளர் சுபாஷ்.எம்.தீக்காடன் கோட்டயம் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

கேரள போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் தாமஸ்சாண்டி. இவருக்கு ஆலப்புழை வலியகுளம் பகுதியில் ஒரு தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு செல்லும் பாதையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து தார்சாலை அமைத்துள்ளார். மேலும் இதற்கான செலவை எம்.பி.க்கள் மேம்பாட்டு நிதி மற்றும் பொறியியல் துறைக்கான நிதி மூலம் செய்துள்ளார்.

இதனால் அரசுக்கு ரூ.65 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த கோர்ட்டு, மந்திரி மீதான புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆலப்புழை போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும் விசாரணையில் அரசியல் பிரமுகர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குறுக்கீடு இருக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆலப்புழை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிக்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story