கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் உள்பட 4 பேர் கைது


கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2017 3:00 AM IST (Updated: 6 Nov 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டம் அகதிகள் முகாமில் வசிப்பவர் வள்ளியம்மாள்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டம் அகதிகள் முகாமில் வசிப்பவர் வள்ளியம்மாள்(வயது 52). கடந்த மே மாதம் இவரது தந்தை பெரியசாமி(77) என்பவரை அதே அகதிகள் முகாமில் வசிக்கும் .சுமன் என்பவர் கொலை செய்து விட்டார்.

 இந்த வழக்கில் சுமன் ஜாமீனில் உள்ளார். நேற்று சுமன், அவரது உறவினர்கள் துஷ்யந்தன்(30), ஜேசுதாஸ்(40), திலீபன்(29) ஆகியோருடன் சென்று வள்ளியம்மாளுடன் தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம். இது பற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் சுமன் உள்பட 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story