819 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் 10–ந்தேதி நடக்கிறது


819 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் 10–ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 6 Nov 2017 3:30 AM IST (Updated: 6 Nov 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

819 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் 10–ந்தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

மும்பையில் மராட்டிய வீட்டு வசதி வாரியம் (மகாடா) சார்பில் வீடுகள் கட்டப்பட்டு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மகாடா மும்பையின் பல்வேறு பகுதிகளில் 819 வீடுகளை கட்டி உள்ளது. இந்த வீடுகளை வாங்க 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதில், 819 பேருக்கு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட உள்ளது. இந்த குலுக்கல் வருகிற 10–ந்தேதி பாந்திராவில் உள்ள ரங்குசாரதா அரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து மகாடா அதிகாரி பகவான் சாவந்த் கூறுகையில், ‘மகாடா ஐ.டி. பிரிவினர் ‘பேஸ்புக் லைவி’ல் குலுக்கலை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கட்கிழமை(இன்று) மகாடாவிற்கான பேஸ்புக் பக்கம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story