நாளை மாணவர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும்
நாளை மாணவர்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை,
சட்டமேதை அம்பேத்கர் 117 ஆண்டுகளுக்கு முன் 1900–ம் ஆண்டு நவம்பர் 7–ந் தேதி பள்ளிப்படிப்பை தொடங்கினார். அவர் பள்ளியில் சேர்ந்த நாள் ஆண்டுதோறும் மாணவர் தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டும் 7–ந் தேதி(நாளை) மாணவர் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு சார்வில் தீர்மான நகல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துக்கொடுத்த அம்பேத்கர் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் ஆட்சி சட்டம் போன்ற வேர்களை சமுதாயத்தில் பரவச்செய்தவர் ஆவார். இவர் கல்வியில் எட்டிய உயரங்கள் வரலாற்றையே மாற்றி அமைத்தது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் புதிது புதிதாக தேடிப்படிக்கும் மாணவனாகவே திகழ்ந்தார்.
அவர் கல்வியை தொடங்கிய நவம்பர் 7–ந் தேதியை அனைத்து பள்ளிகளும் மாணவர் தினமாக கடைப்பிடிக்கவேண்டும் என்பதை இந்த தீர்மானத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story