ஒரே வீட்டை அடகு வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி
ஒரே வீட்டை அடகு வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தானே, கோல்பாட் பகுதியை சேர்ந்தவர் அஜய் தவான். இவர் கடந்த 2011–ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புனேயில் உள்ள அவரது வீட்டை அடகு வைத்து கடன் வாங்கினார். ஆரம்பத்தில் அவர் வங்கி கடனை சரியாக கட்டினார். 2014–ம் ஆண்டுக்கு பிறகு அவர் கடனை முறையாக செலுத்தவில்லை. சமீபத்தில் வங்கி அதிகாரிகள் அஜய் தவானின் புனே வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்தனர்.அப்போது அஜய் தவான் அதே வீட்டை அடகு வைத்து வேறு ஒரு வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் இந்த மோசடி குறித்து ஆசாத் மைதான் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணங்கள் மூலம் ஒரே வீட்டை அடகு வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட அஜய் தவானை அதிரடியாக கைது செய்தனர்.Related Tags :
Next Story