கரூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருட்டு
கரூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது29). இவர் ஜவுளி நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செந்தில்நாதன் நேற்று முன்தினம் சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரமும் திருட்டுபோய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மொய்ப்பணம்
தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகள் மனைவியின் நகைகள் எனவும், பணம் திருமணத்தின் போது கிடைத்த மொய்ப்பணம் எனவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி திருடிசென்றது தெரியவந்தது.
இதற்கிடையில் செந்தில்நாதன் வீட்டிற்கு அடுத்த நூர்முகமது என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று நகை, பணத்தை திருடிச்சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. நூர்முகமது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதால் வீட்டில் யாரும் இல்லை. இதனால் நூர்முகமதுவை செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்தனர். பீரோவில் 5 பவுன் நகையும், ரூ.27 ஆயிரமும் வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
போலீசார் வலைவீச்சு
கரூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.77 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story