வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

அகரம்சீகூர் வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றில் தினமும் சுமார் 20 முதல் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான எந்த அனுமதியும் அரசிடம் இருந்து பெறவில்லை. இந்த மணல் வடக்கலூர், பென்னக்கோணம், வதிஷ்டபுரம், வயலப்பாடி, வேப்பூர், துங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வெள்ளாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல், குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையில் வெள்ளாற்றில் வரும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டமானது, மணல் திருட்டால் குறைந்து வருகிறது. அகரம்சீகூருக்கு தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள சின்னாற்றில் மணல் திருடப்பட்டதால் இன்று வெறும் பாறைகள்தான் உள்ளது. மேலும் இதுபோல் அத்தியூர், ஒகளூர், கீழக்குடிக்காடு, வெள்ளாற்றிலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

இந்த கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயராததால் குடிநீருக்காக பல போராட்டங்கள் நடைபெற்றன. இது குறித்து நாளை (அதாவது இன்று) பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story