விமான பணிப்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி என்ஜினீயரிங் மாணவர் கைது


விமான பணிப்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி என்ஜினீயரிங் மாணவர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2017 3:28 AM IST (Updated: 6 Nov 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவை சேர்ந்தவர் 19 வயது மாணவர். இவர் பெங்களூரு கனகபுரா ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

பெங்களூரு,

கொல்கத்தாவை சேர்ந்தவர் 19 வயது மாணவர். இவர் பெங்களூரு கனகபுரா ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு அவர் சென்றார். விடுமுறை முடிந்ததை தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டார்.

பெங்களூரு விமான நிலையத்தை விமானம் நெருங்கியவுடன், அந்த மாணவர் விமான பணிப்பெண் ஒருவரின் தோள் மீது கைவைத்ததோடு, அவருடைய தலைமுடியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதை விமான பணிப்பெண் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர் அவரை மானபங்கம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த சக பயணிகள் மாணவரை கண்டித்துள்ளனர்.

மேலும், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் மாணவரை சக பயணிகள் பிடித்து வைத்து கொண்டனர். சம்பவம் குறித்து விமான பணிப்பெண் விமான நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story