லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்


லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:08 AM IST (Updated: 6 Nov 2017 4:08 AM IST)
t-max-icont-min-icon

லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உப்பள்ளியில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உப்பள்ளி,

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று லிங்காயத் மடாதிபதிகள் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நேற்று லிங்காயத் பிரிவின் சார்பில் பிரமாண்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மந்திரிகள் எம்.பி.பட்டீல், சரணபிரகாஷ் பட்டீல், வினய் குல்கர்னி, ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி எம்.எல்.சி. மற்றும் கலபுரகி சரணபசவேஸ்வர சமஸ்தான மடத்தின் மடாதிபதி சரணபசப்பா உள்பட 200–க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான லிங்காயத் பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Next Story