ஊரட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ஊரட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Nov 2017 4:00 AM IST (Updated: 7 Nov 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி செய்துதரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ராஜபாளையம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகிலுள்ள பேயம்பட்டி, சட்டிக் கிணறு, வரகுண ராமபுரம், அய்யனாபுரம், முதுகுடி, சோலைசேரி, சேத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

எனினும் அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி யும் அடிப்படை வசதி செய்து தரகோரியும் ஆதி தமிழர் பேரவையை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, மாநில துணை பொதுச்செயலாளர் பாண்டியம்மாள், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story