ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:00 AM IST (Updated: 7 Nov 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு,

ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் பாஸ்கர்பாபு கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் ரவிசந்திரன் உள்பட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story