ரேஷன் கடை இடமாற்ற நடவடிக்கை: வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
அரக்கோணம் அருகே புளியமங்கலம் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே புளியமங்கலம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடை கட்டிடத்தில் மழைநீர் கசிந்து ரேஷன் பொருட்கள் மீது விழுந்துள்ளது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக இந்த ரேஷன் கடையை புளியமங்கலம் காலனி பகுதியில் உள்ள கடையோடு இணைத்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியமங்கலம் கிராம பொதுமக்கள் நேற்று அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம் நடத்தியவர்களிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் கூறுகையில், தற்போது புளியமங்கலம் பகுதியில் உள்ள ரேஷன்கடை கட்டிடம் பழுதாக இருப்பதால் தற்காலிகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உள்ள கடையை வேறு பகுதிக்கு மாற்றினால் நாங்கள் நீண்டதூரம் சென்று பொருள் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே எங்கள் பகுதியில் தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் வைத்து பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும், மேலும் பழுதடைந்த கடையை சரி செய்து மீண்டும் அங்கு வைத்து பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
உங்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story