திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை: பாப்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற்றம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை: பாப்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:00 AM IST (Updated: 7 Nov 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்து முழுவதுமாக நிரம்பி உள்ளது.

இதனால் அந்த ஏரி, கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீண்ட வருடத்துக்கு பிறகு தற்போது இந்த ஏரி முழுவதுமாக நிரம்பி உள்ளதால் பாப்பரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த ஏரி நீர் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story