வாயில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளி தம்பதிகள் போராட்டம்


வாயில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளி தம்பதிகள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:00 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

வாயில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளி தம்பதிகள் போராட்டம்

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-முத்துலட்சுமி, வினோத்-ஜெசிந்தா தம்பதி. மாற்றுத்திறனாளிகளான இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்த 2 தம்பதிகளும் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story