திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கன மழையினால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30-ந் தேதி முதல் தொடங்கி மழை இடைவிடாது பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக வெள்ளப்ெ-ருக்கு ஏற்பட்டு பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் தேங்கி நிற்கின்றது. போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் அனைத்து சாலைகளும் பழுதடைந்து போக்குவரத்து பயனற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றது. கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் மூழ்கியுள்ளன. இதனால் குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி கோட்டூர், முத்துப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. மழை தொடர்வதால் வயல்களில் தேங்கி உள்ள வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பரவலாக மழை பெய்தது. இதனால் மாணவர்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 5-வது நாளாக நேற்றும் விடுமுறை விடப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருவாரூர்-15, நன்னிலம்-40, குடவாசல்-26, வலங்கைமான்-25, பாண்டவையாறு தலைப்பு-10, மன்னார்குடி-13, நீடாமங்கலம்-1, திருத்துறைப்பூண்டி-23, முத்துப்பேட்டை-11.


Related Tags :
Next Story