வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகன்கள் உள்பட 6 பேர் கைது


வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகன்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகன்கள் உள்பட 6 பேர் கைது

திருவரங்குளம்,

திருவரங்குளம் கே.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சோலை. இவரது மகன் மூர்த்தி (வயது 35). இவர் கடந்த 3-ந்தேதி அதிகாலை தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்குக்கு காரணமாக இருந்த திருவரங்குளம் கே.வி.எஸ். நகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி வெள்ளையம்மாள் (45). அவரது மகன்கள் மணிகண்டன்(24), ராஜாங்கம் (21), இவர்களது தாத்தா வீரப்பன் (60), மேற்கு மேலக்கோட்டை ரஞ்சித் (21), புதுக்கோட்டை காமராஜபுரம், 23-ம் வீதியை சேர்ந்த திவாகர் (21) ஆகிய 6 பேரையும் ஆலங்குடி போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story