சட்டசபை கூட்டத்தில் மூடநம்பிக்கை தடை மசோதா தாக்கல் மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி


சட்டசபை கூட்டத்தில் மூடநம்பிக்கை தடை மசோதா தாக்கல் மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி
x
தினத்தந்தி 7 Nov 2017 3:50 AM IST (Updated: 7 Nov 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை கூட்டத்தில் மூடநம்பிக்கை தடை மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

பெங்களூரு, 

சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாற்காலிகள் காலியாக இருந்தன

எடியூரப்பா மாற்றத்திற்கான பயணத்தை தொடங்கியுள்ளார். எதிர்பார்த்த கூட்டம் வராததால் அவரது பயணம் முதல் நாளிலேயே தோல்வி அடைந்துவிட்டது. அந்த கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்தன. இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். பா.ஜனதாவினர் மாற்றத்திற்கான பயணம் என்று சொல்கிறார்கள். இது எனக்கு புரியவில்லை. அந்த கட்சி தலைவர்கள் மனம் மாற வேண்டும் என்று நினைத்து இந்த பயணத்தை எடியூரப்பா நடத்தலாம்.

செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கானோரின் வரவேற்பு கிடைப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். ஆனால் எடியூரப்பா பயணத்திற்கு மக்களிடையே எங்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. கவுரி லங்கேஷ் கொலையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

வட கர்நாடக பிரச்சினைகள்

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சொகடு சிவண்ணா காங்கிரசுக்கு வருவதாக இருந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அவர் எங்கள் கட்சியில் சேருவதாக சொல்லவில்லை. பெலகாவியில் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் வட கர்நாடக பிரச்சினைகள் குறித்து அதிகமாக விவாதிக்கப்படும். அந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். மூடநம்பிக்கை தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.

இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார். 

Next Story