சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த விமானத்தில் கிடந்த 2 கிலோ தங்க கட்டிகள் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று வந்தது. வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகளும், விமான பாதுகாப்பு அதிகாரிகளும் விமானத்தின் உள்ளேயும், வெளியேயும் சோதனை செய்தனர்.
மதுரை,
சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று வந்தது. வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகளும், விமான பாதுகாப்பு அதிகாரிகளும் விமானத்தின் உள்ளேயும், வெளியேயும் சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தின் உள்ளே பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் வெள்ளை நிற பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கட்) ஒன்று அனாதையாக கிடந்தது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும்.
அதனை அதிகாரிகள் கைப்பற்றி தங்க கட்டிகளை கடத்திக்கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பாதுகாப்பு உடை கிடந்த இருக்கையில் இருந்தவர்கள் யார் என்று விமான டிக்கெட்டை பரிசோதனை செய்து பார்த்தபோது, அதில் 2 குழந்தைகள் பயணம் செய்ததும், அந்த பாதுகாப்பு உடை விமானத்தில் கொடுப்பது இல்லை என்பதும் தெரியவந்தது.
ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.