திருப்பூரில் சுற்றுலா வாகன ஓட்டுனர் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர் உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
தமிழ்நாடு அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர் உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் தலைமை தாங்கினார்.
அனைத்து வாகனங்களுக்கும் சீட் டாக்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும். அசல் ஓட்டுனர் உரிம சட்டத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story