பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 17 ஆயிரத்து 660 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது சித்தராமையா தகவல்


பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 17 ஆயிரத்து 660 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது  சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2017 2:30 AM IST (Updated: 8 Nov 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 17 ஆயிரத்து 660 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 17 ஆயிரத்து 660 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக சித்தராமையா கூறினார்.

பெங்களூருவில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

நில உரிமை பத்திரம்

கர்நாடகத்தில் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி தங்களின் கட்டிடங்களை முறைப்படுத்த கோரி வந்துள்ள விண்ணப்பங்கள் மீது அடுத்த 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையற்ற அனைத்து கட்டிடங்களையும் முறைப்படுத்த வேண்டும்.

அதே போல் வன நில உரிமை குழு பரிந்துரைப்படி வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பத்திரம் வழங்கும் பணியும் துரிதகதியில் நடைபெற வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் 7 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் நிலுவையில் உள்ள பணிகளை நேர்மையாக, பாரபட்சம் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும். மக்கள் பாராட்டும்படி பணியாற்றுங்கள்.

17 ஆயிரத்து 660 ஏக்கர் நிலம்

ஏ.டி.ராமசாமி அறிக்கையின்படி பெங்களூருவில் மொத்தம் 34 ஆயிரத்து 111 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.7,781 ஏக்கர் நிலங்கள் பொது நலனுக்காக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 11 ஆயிரத்து 660 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெறாத 6,000 ஏக்கர் அரசு நிலங்களும் மீட்கப்பட்டு இருக்கிறது. ஆகமொத்தம் பெங்களூருவில் 17 ஆயிரத்து 660 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

பல்வேறு அமைப்புகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிலம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். பெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்–மந்திரியின் சமையல் கியாஸ் திட்டத்தின் கீழ் 30 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படும்.

செல்போன் செயலி

விவசாயிகள் தங்களின் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செல்போன் செயலி மூலம் தெரிவிக்கலாம். இதுபற்றி நீங்கள் விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story