மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததே மோடி அரசின் சாதனை மந்திரி ராமலிங்கரெட்டி பேட்டி
மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததே மோடி அரசின் சாதனை ஆகும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு,
மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததே மோடி அரசின் சாதனை ஆகும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
தொலைபேசி ஒட்டுகேட்புமந்திரி எம்.பி.பட்டீல் தனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் என்னிடம் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை. தொலைபேசி ஒட்டுகேட்பு பற்றி நான் இதற்கு முன்பே கூறினேன். எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுகிறது. என்னிடம் இருப்பதே ஒரே போன் தான். அதில் நல்ல விஷயங்களை பற்றியே பேசுகிறேன்.
அதனால் தொலைபேசி ஒட்டுகேட்பு பற்றி நான் கவலைப்படவில்லை. எம்.பி.பட்டீல் வட கர்நாடகத்தில் ஒரு முக்கியமான அரசியல் தலைவராக உள்ளார். அவர் பா.ஜனதா கட்சிக்கு தடையாக இருக்கிறார். அதனால் அவரை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படும் என்று நான் கருதுகிறேன். ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து நாளையுடன்(இன்று) ஒரு ஆண்டு ஆகிறது.
வேலையை இழந்தனர்இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்தனர். ரூபாய் நோட்டு எந்த நோக்கத்திற்காக ரத்து செய்யப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. பயங்கரவாதம், ஊழல் குறையவில்லை. பிரதமர் மோடியால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை.
ரூபாய் நோட்டு ரத்து திட்டத்திற்கு பிறகு நிதி மந்திரி அருண்ஜெட்லி சில புதிய திட்டங்களை கொண்டு வந்து, நடுத்தர மற்றும் வறுமையில் உள்ள மக்களை பெரிய கஷ்டத்தில் சிக்க வைத்தார். மொத்தத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததே மோடி அரசின் சாதனை ஆகும். இதே நிலை தொடர்ந்தால் வரும் நாட்களில் இந்தியா மேலும் வறுமைக்கு தள்ளப்படும்.
இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.