பேரணாம்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்


பேரணாம்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 6 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினக்கூலி பணியாளர்கள் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாகவும், 5 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) பணம் கட்டியும் அதற்கான ரசீது வழங்கவில்லை. மேலும் 7 மாதங்களாக புதிதாக வருங்கால வைப்பு நிதிக்கு ரூ.2,400 பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கும் ரசீது, கணக்கு எதுவும் கிடையாது. நகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகரில் குப்பை அகற்றும் பணி பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நகர செயலாளர் எல்.சீனிவாசன், துணை செயலாளர் சிவாஜி, அ.தி.மு.க. (அம்மா) அணி நகர செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் கலந்து பேசினர். பின்னர் ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு கூறுகையில் ‘சுகாதார பணிக்கு துப்புரவு பணியாளர்களை பிரித்து ஒவ்வொரு வார்டுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ஒரு வார்டுக்கு துப்புரவு பணியாளர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். அவரது உறவினர் இங்கு பணிபுரிந்து வருகிறார். அவரது தூண்டுதலின் பேரில் போராட்டம் நடந்தது தெரிய வந்துள்ளது. அந்த துப்புரவு பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

Related Tags :
Next Story