தண்டையார்பேட்டையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


தண்டையார்பேட்டையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Nov 2017 3:30 AM IST (Updated: 8 Nov 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தண்டையார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியை சேர்ந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

ராயபுரம், 

சென்னை தண்டையார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 39). தண்டையார்பேட்டை ரத்தினசபாபதி தெருவில் உள்ள பாலிஸ் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற விமல்குமார் பட்டறையில் இருந்த மின்சார சுவிட்சை போட்டார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி விமல்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த விமல்குமாருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

Next Story